பழங்களின் மருத்துவம்

Friday, November 6, 2015

இதயப் படபடப்பு நீங்க பேரிக்காய்

இதயப் படபடப்பு நீங்க பேரிக்காய்


பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக்கூடியது . வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது சுவைமிகுந்த பழங்களில் ஒன்று. பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும். இதில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.

Friday, August 28, 2015

பழங்களின் மருத்துவ குணங்கள்

பழங்களின் மருத்துவ குணங்கள் 


* கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி தரும்.
* செவ்வாழை கல்லீரல் வீக்கம், சிறுநீர் வியாதிகளை குணமாக்கும்.
* பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியைக் கொடுக்கும்.
* ரஸ்தாளி வாழை கண்ணிற்கும், உடல் வலுவிற்கும் நல்லது. பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும்.
* நேந்திரம் பழம் இரும்புச் சத்தினை கொடுக்கும்.
* பப்பாளிப் பழம் மூல வியாதிக்காரர்களுக்கு நல்லது.
* மாம்பழம் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

Thursday, May 21, 2015

மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்

        மலச்சிக்கலை போக்கும் மாம்பழம்


   “மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும்!”
       என்பது பழமொழி.
     தித்திப்பு நிறைந்த மாங்கனி, முக்கனிகளில் முதன்மையானது. 600 வகைகள் இருக்கும் மாம்பழத்தில் முக்கியமான 40 ரகங்கள் இந்தியாவில் விளைகின்றன.

  மாம்பழம் ‘கடவுளின் கனி’ என்று வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனிய சுவையுடன் உள்ள இக்கனியில், பலவித சத்துக்களும் அடங்கியுள்ளன.

Tuesday, May 12, 2015

இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழங்களின் மருத்துவக் குணங்கள்

இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழங்களின் மருத்துவக் குணங்கள்


சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்

நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள்


உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான். மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

Tuesday, January 20, 2015

நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்

நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்


இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும்.

Sunday, January 18, 2015

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவைகளின் மருத்துவப் பயன்கள்

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவைகளின் மருத்துவப் பயன்கள்


எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம். 

Thursday, December 25, 2014

உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்

உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்



பெண்களுக்கு பிரத்யோகமாக வரக்கூடிய சில நோய்களிலினின்று பெண்களுக்கு விடுதலை அளிக்கக்கூடிய ஆற்றல் சில கனிகளுக்கு உண்டு. அவற்றுள் முதன்மையாக கருதக்கூடிய கனி அத்திப்பழம். இது பெண்களுக்கு மாதவிடாய் மூலம் ஏற்படும் இரத்த சோகையை தீர்க்கும் வல்லமை படைத்தது. இந்த அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.

Tuesday, September 23, 2014

வாழைப்பழத் தோல்களில் சில மருத்துவம்

 அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன. 


வாழைப்பழம் குடலில் சேரும் அமிலத் தன்மையைச் சமப்படுத்த வல்லது. இதனால் நெஞ்செரிச்சலிலிருந்து மாபெரும் நிவாரணத்தை தருகிறது. வாழைப் பழத்தோடு மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடுவதால் இருமல் விரைவில் குணமாகும். பழுத்த நேந்திரம் பழமாக இருந்தால் இன்னும் விரைவில் குணம் தரும். 

Friday, September 19, 2014

இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்

வாழையில் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்க கூடிய பல்வேறு மருத்துவப் பொருள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக `செரடோனின்' `நார் எபிநெப்ரின்' `டோபமைன்' என்னும் மருத்துவ சத்துக்கள் மலிந்துள்ளன. இதில் செரடோனின் என்பது ஒருவகை ``ஹார்மோன் ''மட்டுமின்றி உணர்வு கடத்தி ஆகும். 

இச்சத்து உடலிலுள்ள பல திசுக்களிலும், ரத்த வைட்டமின்களிலும் குடற்பகுதியின் உட்புறம் உள்ள சளிப்பகுதியிலும் பினியல் கிளாண்ட் என்னும் சுரப்பியிலும் மத்திய நரம்புப் பகுதியிலும் காணப்படுகிறது செர்டோனின் எனும் மருந்து சத்து குடலில் சீரணத்துக்கான திரவத்தைச் சுரக்கச் செய்து, மென் திசுக்களைச் தூண்டி செயல்பட வைப்பது, ரத்த நாளங்கள் சுருங்கி விரிவடையத் துணை நிற்கிறது. 

Wednesday, July 23, 2014

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க எலுமிச்சை

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. 


மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக்கூட எளிதில் தீர்த்துவிட முடியும். பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்னவென்றால் உடல் பருமன், தொண்டைப்புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். 

Friday, July 18, 2014

அல்சர் குணமடைய விளாம்பழம்

  • தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. 


  • விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது. 

Sunday, July 13, 2014

இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துகுடி

மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.


பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு 

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். 

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

நன்கு பசியைத் தூண்ட

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

பெண்களுக்கு

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

முதியோர்களுக்கு

வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.

Thursday, July 10, 2014

கிர்ணிப்பழத்தின் அழகு, ஆரோக்கியக் குறிப்புகள்


  • தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புதம் கவசம் கிர்ணிப்பழம். இதை முலாம்பழம் என்றும் அழைப்பர். இதில் புரதமும்  கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. உடலுக்கு வேண்டியச் சத்துக்களை  அள்ளித்தரும் வள்ளலான கிர்ணிப்பழத்தின் அழகு, ஆரோக்கியக் குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

  • ஐம்பது வயதுக்கு மேல் தோலின் எண்ணெய்ப் பசை குறைந்து. வறண்டு போய்விடும் இவர்கள் பியூட்டி பார்லரில் வேக்சிங் அல்லது திரெடிங்  போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும்  தலா ஒரு டீஸ்பூன் கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.

புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது மாம்பழம்

முக்கனிகளின் முதல் கனியான மாம்பழத்தின் பெருமை அபாரம். மாம்பழத்தின தாயகம் நமது நமது நாடு தான் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இன்று பல நாடுகளில் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. எனினும் நமது நாட்டு பழங்களுக்குத்தான் உலகமெங்கும் வரவேற்பு அமோகமாய் இருக்கிறது. இருப்பினும்சீசன் பழமான இது மார்ச் முதல் ஜீலை வரை தான் கிடைக்கின்றது. சாதாரணமாக ருமானி,பெங்களுரா, பச்சை, பங்கனபல்லி, நீலம், பீத்தர், மல்கோவா என்று இவ்வகை பழங்களே அதிகமாக மார்க்கெட்டுக்கு வருகின்றன.
மாம்பழங்களில் சிலவகை அதிக இனிப்பாகவும் சில வகை இனிப்பும் புளிப்பும் கலந்து ருசியோடும், சிலவகை வெறும் புளிப்பாகவும் இருக்கும்.

Saturday, July 5, 2014

பழங்களின் மருத்துவம் - கொய்யாப்பழம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து.

நம் ஊர் சீதோஷ்ண நிலையில் நன்றாக வளரும் கொய்யாப் பழத்தில் `வைட்டமின் சி' சத்து நிறைந்திருக்கிறது.

கொய்யாப்பழம், மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்து. அதற்காக இதை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம்.

Monday, November 11, 2013

சத்துப் பட்டியல்:தேங்காய்

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும்


அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்...

Sunday, October 27, 2013

பழங்களின் மருத்துவம் - எலுமிச்சைப் பழத்தினால் விலகும் நோய்கள்

எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் என்பin; போல எலுமிச்சைப்பழம் உலகெங்கும் நிறைந்திருப்பதோடு மக்களுக்கு அன்றாடம் உணவுப் பொருளாhகப் பயன்படுகிறது. குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிரம்பி மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வரோக நிவாரணியாக உதவுகிறது.

தெய்வ வழ்ப்பாட்டில் அம்மனுக்கு எலுமிச்சைப்பழ மாலை சாத்தி வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.

Friday, October 25, 2013

பழங்களின் மருத்துவம் - பல வகைகள் கொண்ட வாழைப்பழத்தில் உள்ள மருத்துவப் பயன்

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் இது.

Saturday, October 19, 2013

ஒரு வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஜீஸ்கள்

தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் ஜீஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது ஜீஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம்.
குறிப்பாக உடல் எடை குறைய வேண்டுமானால்ஈ முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும. இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம்.

Comments

Popular posts from this blog

திருக்கோயில்

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு

கீரை மருத்துவம்