கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்
Friday, November 6, 2015
உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்
உடல்சோர்வு நீக்கும் சுண்டைக்காய்
நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம்
விஞ்சுவா தத்தின் விளைவும்போம்-வஞ்சியரே
வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக்
காயைச் சுவைப்பவர்க்குக் காண்
என்று சுண்டக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாடத்தில் கூறப்பட்டுள்ளது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தில் உள்ள வைட்டமின்கள், குளுக்கோசைடுகள், போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. டார்வோனின் ஏ, டார்வோனின் பி, பேனிகுனோஜெனின், டார்வோஜெனின் போன்றவை காணப்படுகின்றன.
உடல் சோர்வு நீங்கும்
சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.
Monday, April 6, 2015
கேரட் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
கேரட் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும்.
ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில் அதிகம் சாப்பிட்டு வந்தால்,
Sunday, January 18, 2015
ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி
ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இது பயிராகிறது. தக்காளி மலச்சிக்கலைப் போக்க கூடியது, ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது, பித்த நீரைச் சுரக்க செய்வது, செரிமானத்தைத் தூண்டக்கூடியது, ஓமியோ மருத்துவத்தில் தக்காளியை மூட்டுவலிக்கான மருவத்துவமாக சேர்க்கப்படுகிறது.
Monday, December 22, 2014
பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்
பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்
மனித உடலானது திறம்பட செயல்பட அனைத்து சத்துக்களும் தேவை. இந்த சத்தானது நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேருகிறது. இதில் ஏதேனும் ஒரு சத்துப் பொருள் குறையும் போது தான் நம் உடலை நோய தாக்க ஆரம்பிக்கும். அப்படி ஏற்படும் பற்றாக் குறையினை ஈடுகட்ட மருந்து மாத்திரைகளை உட்கொள்வதை விட, நோய் வரும் முன் காத்தலே சிறந்தது.
Saturday, December 20, 2014
கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்
கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்
கத்திரிக்காய் இல்லாமல் தென்னாட்டு சமையலே இருக்காது என்னும் வகையில் சாம்பார், பொரியல், மசியல் என்று பல உணவு வகைகளில் கத்தரிக்காய் தவறாமல் இடம் பெற்றிருக்கும். உணவாகப் பயன்படும் கத்திரிக்காயின் மருத்துவ குணங்களை மிக விரிவாக நம் முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.
Sunday, October 19, 2014
ரத்த புற்றுநோய் குணமாக்கும் வெண்டைக்காய்
வெண்டைக்காய் எந்தவிதமான நச்சுத் தன்மையையும் பெற்றிருக்கவில்லை என்பதாலும் சுவை மிக்கது என்பதாலும் இளஞ்சிறார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூட தருவதற்கு பாதுகாப்பானதும் பயன் உள்ளதாகும்.
பல்வேறு உடல் குறைபாடுகளையும், உற்ற நோய்களையும் போக்கும் குணம் வெண்டைக்காய்க்கு உண்டு. மலச்சிக்கல், மனச் சிக்கல் ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு.
Wednesday, July 16, 2014
தாய்ப்பால் சுரக்கவைக்கும் சுரைக்காய்
சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் மருத்துவக் குணங்கள் ஏராளம்.
'சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆண்மைக்குறைபாட்டை நீக்கும் சிறந்த காய் இது. தினசரி உண்டுவந்தால், கல் அடைப்பு நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டும்; உடலின் வெப்பநிலையையும், பித்தத்தையும் சமநிலைப்படுத்தும். இதனை 'பித்த சமனி’ என்பர்.
Friday, July 11, 2014
நிறைய சத்துகளையும் கொண்ட பீட்ரூட்
'செக்கச் செவேல்' சிவப்பு நிறத்துடன் நிறைய சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத் திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்களை இங்கே பார்க்கலாம்...
- பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.
தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம்
கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட். வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் நல்லது.
* வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம். விரைவில் குணமடையும்.
Monday, July 7, 2014
கொழுப்பை குறைக்கும் முட்டைக் கோஸ்
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம்.
உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...
Saturday, November 23, 2013
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.
Monday, November 4, 2013
காய்கறிகளின் மருத்துவம்: புண்களை ஆற்றும் பூசணிக்காய்
கிராமப்புறங்களில் மார்கழி மாதம் முழுவதும் அனைவரின் வீட்டு கோலங்களின் மீது தவறாமல இடம் பெறுவது இந்த பூசணிக் பூ. இதை வைத்து திரைப்பட கவிஞர்கள் பல பாடல்களை இயற்றியுள்ளனர். இதிலிருந்தே பூசணிக்காயின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளில் முக்கியமானதும், நமது உடலுக்கு பல வகைகளில் பயன்படக் கூடியதுமான பூசணிக்காய் பற்றி காணலாம்.
Saturday, October 26, 2013
தைராய்டு நீங்க சௌசௌ

நாம் உண்ணும் உணவில் சில காய்கறிகளை எப்பொழுதாவது தான் பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று சௌசௌ. இதன் பயன்பாடுகளைப் பற்றி இந்த இதழில் காண்போம்.
கொடி வகையைச் சார்ந்த சௌசௌ குளிர்மண்டலப் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதன் இலைகள் பெரியதாக பிளவுபட்டுக் காணப்படும். இளம் காய்கள் பௌர் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இதன் விதைகள் காய்களின் உட்புறம் இருக்கும். முற்றிய விகைகளை பயிரிட பயன்படுத்தலாம்.
Monday, October 21, 2013
காய்கறிகளின் மருத்துவம் - நோய் எதிர்ப்பு சக்திக்கு முள்ளங்கி
கறிக்குழம்பின் சுவையை மேலும் அதிகரிப்பதில் இதன் பங்களிப்பு மிகச் சிறந்தது. ஆனால் சிலர் இதன் மணத்தை விரும்பாத காரணத்தினால் உணவில் இதை தவிர்த்து விடுகின்றனர். நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் காய்கறிகளில் முக்கியமானது இந்த முள்ளங்கி. மனித உடல் நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை தாராளமாக பயன்படு;த்தி வல உடல் நலக் குறைவினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் பெருமளவில் குறைக்கலாம்.
முள்ளங்கியில் வெள்ளை மற்றும் சிவப்பு முள்ளங்கி என இரண்டு வகைகள் உள்ளன.
முள்ளங்கியில் வெள்ளை மற்றும் சிவப்பு முள்ளங்கி என இரண்டு வகைகள் உள்ளன.
Saturday, October 19, 2013
காய்கறிகளின் மருத்துவம் - பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
இவை வளரும் பகுதியின் தன்மைக்கேற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இவற்றின் றிநம் இருக்கும் இதன் சுவை கசப்பாக இருந்தாலும் இதில் உடலுக்குத் தேவையா ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. பாகற்காயை ஜீஸ் எடுத்தும் அருந்தலாம். மேலும் ஊறுகாய், பொரியல், வறுவல, தொக்கு, குழம்பு, கூட்டு என்று ஏராளமாக உணவு வகைகளில் பயன்படுத்தலாம்.
காய்கறிகளின் மருத்துவம் - வெள்ளரிக்காயை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 14 காரணங்கள்:
பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கக்கூடிய காய்கறிகள் சில வகைகள் தான உள்ளது. அவைகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். பொதுவாக வெள்ளரிக்காய பிடிக்காதவர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க முடியும்.முக்கியமாக வெப்பத்தை தணிக்க உபயோகிக்கப்படும் வெள்ளரிக்காய் வேறு பல விதங்களில் நமக்கு நன்மையை ஏற்படுத்துகின்றன. அவை அழகிலும் கூட பல விதத்தில் உதவி புரியும். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக நிற்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.
Saturday, October 5, 2013
உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெங்காயம்

அக்காலத்தில் நம் முன்னோர்கள் வேலைக்கு செல்லும் முன் சாப்பிடும் ஒரே உணவு பழைய சாதமும், வெங்காயமும் இதற்கு இணையான, சத்தான உணவு ஏதுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை சாப்பிட்டு நன்றாக வேலை செய்து வந்ததால் நாம் முன்னோர்கள் எந்த வித நோயும். அணுகாமல் நீண்ட காலம் ஆரோக்கியமதக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ, எந்த உணவு சுவையாக இருக்கிறது என்று தேடிப்பிடித்து சாப்பிடுகிறோமே தவிர, எது சத்தான உணவு, எதை சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது என்பதை பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதே இல்லை.
அதனால் தான் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் சிறு வியாதிகளுக்கே நாம் மருத்துவரை அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். சத்தான காய்கறிகள் தான் நம் உடலை பாதுகாக்கும் மருத்துவர்கள். அந்த வகையில், சமையலுக்கு கூடுதல் சுவை சேர்க்கும் காய்கறிகளில் ஒன்றான வெங்காயத்தைப் பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் காண்போம்.
Wednesday, October 2, 2013
நமது அன்றாட உணவும் காய்கறிகளின் தன்மையும்
நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரோட்டீன், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் ஆகியவைகள் உள்ளன. கார்போஹைட்ரேட் இயங்கும் சக்தியை தருகிறது. புரோட்டீன் உடலை வளர்க்கிறது. கொழுப்பு உடல் மாற்றத்தை தருகிறது. ஒரு மனிதன் தன் எடையை தக்க வைத்துக்கொள்ள குறைந்தது 30-35 கலோரி உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். எடை கூட இன்னும் நிறைய உணவு உட்கொள்ளவேண்டும். ஒரு மனிதன் தினமும் அவனுடைய உடல் எடையில் கிலோவிற்கு 30 மி.லி. தண்ணீர் பருகவேண்டும். அதே அளவு சிறுநீர் வெளியேர வேண்டும். இனிப்பு, உப்பு, துவர்ப்பு உள்ள பொருட்கள் மனிதனின் எடையை கூட்டும். கசப்பு, காரம், புளிப்பு ஆகிய பொருட்கள் மனிதனின் எடையை குறைக்கும்.
வாதம் உள்ளவர்கள் இனிப்பு, உப்பு, புளிப்பு ஆகிய பொருட்களை உண்ணலாம். பித்தம் உள்ளவர்கள் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய உணவுகளை உண்ணலாம். கபம் உள்ளவர்கள் கசப்பு, துவர்ப்பு, காரம் ஆகிய உணவுகளை உண்ணலாம். கசப்பு, புளிப்பு, காரம்; உடைய பொருள்கள் வாயுவை உண்டாக்கும். பயிறு வகைகளை 2 ஆக உடைத்தாலோ அல்லது பிரித்தாலோ இரைப்பையில் வாயு உண்டாகும். ஆகவே பயிறு வகைகளை தண்ணீரில் சில மணி நேரம் ஊர வைத்து சமைத்தல் வாயு உண்டாகாது.


.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
Comments
Post a Comment