உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள்

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள் 


 உலகமயமாக்கல் எனும் சூழலினால் மனிதன் தினமும் பல்வேறு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட உணவுப்  பழக்க வழக்கங்களினால் புதிய புதிய நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடினமான, அவசர வேலைகளினால் மிகுந்த மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும், மக்கள் எளிய மருத்துப முறைகளினால் விடுபட, யோகாசனங்கள் நல் வழியை காட்டுகிறது. இந்த யோகாசனங்களினால் உடலும் மனமும் வன்மையடைந்து நாம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

Thursday, March 19, 2015

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..?


தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர் களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம் ஆனால் இப்போது டைனிங் டேபிள் இது சரியா தவறா..?முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

Sunday, January 25, 2015

இடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்க விபரீதகரணி ஆசனம்

இடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்க விபரீதகரணி ஆசனம்


நோயறற் வாழ்வே,குறைவற்ற செல்லம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு நாம் சற்றேனும் சிந்திப்பதில்லை. வியாதி வந்து குணமடைவதை விட வியாதி வராமலேயே தடுப்பது மிக நல்லது. ஆனால் நமக்கு வியாதி வராமல் தடுப்பதிலும்  வந்தபின் அறவே களைவதிலும் நாம் ஒவ்வொருவரும் செய்வதற்கான யோகாசனம் ஒர் எளிமையான முறையாகும்.

Monday, November 17, 2014

தியானம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்

தினமும் சுமார் 20 நிமிடங்கள் தியானம் செய்து வந்தால் நம் உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் சந்தோஷத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கும் அது உதவும். பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் கூட இதை நிரூபித்துள்ளன.


நம்முடைய சில உடல் குறைபாடுகளுக்கு தியானம் தான் மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது. நாம் எந்த வயதில் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் ஒரு பெரிய ப்ளஸ்! தியானம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

Wednesday, November 12, 2014

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் பவனமுக்தாசனம்

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் ஆசனம் இது. (பவன – வாயு, முக்தி – விடுதலை).


செய்முறை

# மல்லாந்து படுத்துக் கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும்.

# உடலை ஆசுவாசமாக வைத்திருங்கள். ஆழமாக மூச்சை இழுத்து விடலாம்.

# கால்களை 90 டிகிரி மேலே தூக்குங்கள். இதைச் செய்ய இயலாதவர்கள் சற்றே மடித்த நிலையிலும் தூக்கலாம்.

இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறைக்கும் வீரபத்ராசனம்

வீரபத்ராசனத்தில் மூன்று விதமான நிலைகள் உள்ளன. அவற்றில் முதல் நிலையைப் பார்ப்போம்.

முதல் நிலை:

# தாடாசனத்தில் நில்லுங்கள். மூச்சை உள்ளிழுத்தபடி கால்களை விரிக்க வேண்டும். சற்றே குதித்தும் கால்களை விரிக்கலாம். மூன்றரை முதல் நான்கு அடி தூரம் வரை விரிக்கலாம்.

# இடது கால் பாதத்தை 45 முதல் 60 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள். வலது கால் பாதத்தை 90 டிகிரிவரை வலது புறம் திருப்புங்கள்.

மரீச்யாசனம்


செய்முறை

# தண்டாசனத்தில் அமருங்கள். நீட்டியிருக்கும் கால்களின் குதிகால் பகுதிகள் வெளிப்புறம் இழுக்கப்பட்டிருக்க, நுனிக் கால்கள் உடலை நோக்கியபடி இருக்க வேண்டும். முழங்கால்கள், தொடைகள் இறுக்கமாக இருக்கட்டும்.

# இடது கால் நேராக அப்படியே இருக்க, வலது காலை மடித்துப் பாதத்தைத் தொடைக்கு அடியில் கொண்டுவாருங்கள்.

# இப்படிக் கொண்டுவரும்போது மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளுங்கள்.

# வலது கால் பாதம் முழுவதும் கீழே பதிந்திருக்க வேண்டும்.

Saturday, August 30, 2014

கொழுப்பை குறைத்து உடலை மெலிய செய்யும் உடற்பயிற்சி

ஜங்க் உணவுகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பீன்ஸ், நட்ஸ், பயிறுகள் ஆகியவற்றை மாற்றுங்கள். உங்கள் உடலை சுத்தம் செய்யவும் கொழுப்பை அகற்றவும் தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால்,

Sunday, July 27, 2014

உடல் எடையை குறைக்க மரீச்சாசனம்

செய்முறை :

முதலில் இரண்டு கால்களையும் முன் பக்கமாக நீட்டி நிமிர்ந்து உட்காரவும். பிறகு வலது காலை மேல்நோக்கி மடக்கி வைக்கவேண்டும். வலது கால் பாதம், இடது தொடையை உள்பக்கமாகத்தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். வலது தொடைப்பகுதி தரைக்குச் செங்குத்தாக இருக்கவேண்டும். 

பிறகு வலது பக்கமாக குனிந்து வலது கையை வலது முழங்காலைச் சுற்றி வளைத்து உள்ளங்கையை முதுகுக்கு கொண்டு வரவும். இடது கையை பின்பக்கமாக கொண்டு சென்று வலது கை மணிக்கட்டைப் பிடிக்கவும். இந்நிலையில் மூச்சை ஆழ்ந்து உள்இழுத்துக் கொண்டே முதுகை நன்கு நிமிர்த்தி மேலே பார்க்கவேண்டும். 

பிரமர முத்திரை

பிரம்மன் உலகத்தை சிருஷ்டிக்கத் தேவையான சக்தியை வேண்டி தவம் செய்த போது இம்முத்திரையாலேயே தவம் செய்ததாகவும், இது வண்டு போன்ற தோற்றம் தரும் என்பதாலும் இதற்கு பிரமர முத்திரை என்ற பெயர் வழங்கப்படுகிறது.

செய்முறை :

ஆள்காட்டி விரலை மடக்கிக் கொண்டு, நடு விரல் நுனியைப் பெருவிரல் நுனியோடு அழுத்திப்பிடித்து, மற்ற இரு விரல்களையும் நேராக வைக்கவும். இவ்வாறு தினமும் 15 நிமிடம் செய்ய வேண்டும்.

Wednesday, July 23, 2014

முத்திரை முக்கிய அம்சம்

முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம். 
யோகாசன முத்திரைகளுக்கும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும்.

Tuesday, July 22, 2014

இதயம் சீராக இயங்க காளேஷ்வர முத்திரை


செய்முறை :

நடுவிரலை நேராக நீட்டி நுனிகளைச் சேர்க்கவும், கட்டை விரல் இதயத்தை நோக்கி இருக்கும்படி வைத்து நுனிகளை சேர்க்கவும். மற்ற மூன்று விரல்களையும் உட்புறம் மடக்கி இடதுகை விரலும், வலது கைவிரலும் ஒட்டியபடி வைக்கவும். தினமும்15 நிமிடம் பயிற்சி செய்யவும்.  பின்னர் படிப்படியாக நேரத்தின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.

பயன்கள் :

மன அமைதி, தீய எண்ணங்களில் இருந்து விடுதலை, நிம்மதியான உறக்கம், டென்ஷன் போக்குதல் போன்றவற்றிக்கு இந்த முத்திரை ஏற்றது. இதயம் சீராக இயங்கவும், மூச்சு சீராக உடலில் இருக்கவும் செய்கிறது

Thursday, July 17, 2014

பைரவி முத்திரை

பைரவ தந்திரம் என்பது சிவன் தனது துணைவியான பார்வதியை, இடது தொடையில் அமர்த்திக் கொண்டு உபதேசித்த கல்வி முறை.


செய்முறை :

விரிப்பில் அமர்ந்து இடது கையை வலது கையின் மேல் வைப்பது சக்தி அம்சமாகவும். இது பைரவி முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது. 

Wednesday, July 16, 2014

பைரவ முத்திரை

தந்திர முறையில் முக்கியமானதாகக் கருதப்படும் பைரவ தந்திரம் என்பது சிவன் தனது துணைவியான பார்வதியை, இடது தொடையில் அமர்த்திக் கொண்டு உபதேசித்த கலவி முறை. 


செய்முறை :

வலது கையை இடது கையின் மேல் அடிவயிற்றுக்கு நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் 20 நிமிடம் செய்ய வேண்டும். இது சிவ அம்சமாகவும்.

Sunday, July 13, 2014

லோலாசனம் இடுப்பு, முதுகு வலிக்கு இது சிறந்த ஆசனம்


ஒவ்வொரு மனிதனும் புத்துணர்ச்சி பெற உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் அவசியம் தேவை. இந்த இரண்டு பயிற்சியும் ஒருங்கே அமையப் பெற்றதுதான் யோகப் பயிற்சி.

ஒவ்வொரு இதழிலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் செய்யத்தக்க ஆசனங்களை நாம் அறிந்து வருகிறோம்.

 லோலாசனத்தைப் பற்றி அறிந்துகொள்வோம். லோலா என்றால் ஊஞ்சல் என்று பொருள். 

இந்து கோவில்களில் கடவுளின் விக்கிரகங்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். இதுபோல் சில வீடுகளில் ஊஞ்சல் இருப்பதை இன்றும் காணலாம். ஊஞ்சலில் ஆடுவதால் பல நன்மைகள் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் கோவிலிலும், வீடுகளிலும் ஊஞ்சலை பயன்படுத்தி வருகின்றனர்.



கைகளுக்கு அதிக வலிமை தரக்கூடிய இவ்வாசனம் செய்யும் முறையைப் பார்ப்போம்.

ஞாபக சக்தியைத் தூண்டும் ஆசனம் பிறையாசனம்

மனிதன் நோயின்றி வாழ யோக தியானம், உடற்பயிற்சி அவசியம் தேவை.  இன்றைய பொருளாதார போராட்டத்தில் இவை செய்ய நேரம் இருப்பதில்லை.

சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியா என்ற பழமொழிபோல் உடல் நன்கு ஆரோக்கியமாக இருந்தால்தான் பொருளாதாரத்தைத் தேட முடியும்.  அதற்காக தினமும் காலை மாலை நேரத்தில் அரை அணி நேரம் ஒதுக்கினால் போதும்.

அன்றாட வேலைப் பளுவில் உடலும் மனமும் சோர்ந்து போகும்.  அவர்கள் புத்துணர்வு பெற யோகப்  பயிற்சி மற்றும்  உடற்பயிற்சி தேவை.  அரை மணி நேரம் செய்தால் நல்லது.

Wednesday, July 9, 2014

முள்ளந்தண்டு எலும்பின் பாதிப்புகளை சரி செய்ய பூர்வத்தாசனம்

நாம் உண்ணும் உணவு, செயல்களும், சுற்றுப்புற சூழல்களும், தொழில் சார்ந்த வேலைகளும் நம் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பூர்வத்தாசனம்

இவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட ஆயிரக்கணக்கில் நாம் பணத்தை செலவு செய்து வருகிறோம். பல்வேறு மருத்துவ முறைகளையும் பின்பற்றி வருகிறோம். இவற்றிற்கு சித்தர் பெருமக்கள் கண்டுபிடித்து அளித்த எளிய முறைகளே யோகாசனப் பயிற்சிகள் ஆகும். 

நாம் இந்த பூர்வத்தாசனம் பற்றிய செய்முறைகளையும் அதனால் உண்டாகும் நன்மைகளையுப் பற்றியும் அறிவோம்.

எலும்புகளை பலப்படுத்த வாதாயநாசனம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் முதுமொழிக்கு ஏற்ப, நாம் ஒவ்வொருவரும் நல்ல உடல் மற்றும் மனநிலையை பெற்று சீரும் சிறப்புடனும் வாழ வழைகின்றோம் இதன் மூலம் மகிழ்வான வாழ்வினை பெறுகிறோம்.


வாதாயநாசனம் பெயர் காரணம்:

வாதாயனம் என்றால் குதிரை என்று பொருள் இந்த ஆசனம் குதிரையின் முகத்தைப்போல் இருப்பதால் இதற்கு வாதாயனாசனம் என்று பெயர்.
வாதாயநாசனம்

வாதாயநாசனம் - செய்முறை:

  • முதலில் தரையில் உட்கார்ந்து வலது கால் பாதத்தை இடது தொடை மீது வைக்கவும். அதாவது அடிவயிற்றை வலது குதிகால் தொட்டு கொண்டிருக்க வேண்டும்.

  • அடுத்து உள்ளங்கைகளை உடலுக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி மேலே எழவும்

  • அப்படி செய்யும்போது வலது கால் மூட்டுப் பகுதியால் தரையில் முட்டிக் கொடுக்க வேண்டியிருக்கும். மேலும் இடது காலும் சற்று முன்பக்கமாக வளைந்திருக்கும்.

Thursday, July 3, 2014

யோகாசனம் - இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி


முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும்.பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும் கைகளை முட்டி வரை மடக்கி (படத்தில் உள்ளபடி) தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும்.

Saturday, April 26, 2014

Comments

Popular posts from this blog

திருக்கோயில்

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு

கீரை மருத்துவம்