மாடித்தோட்டம் – இரண்டாம் கட்டம் (Expansion)
நான் முள்ளங்கி பதிவில் கூறிய மாதிரி, Coir Pith Media வைத்து அமைத்த எனது முதல் மாடி தோட்டம் நன்றாகவே வந்திருக்கிறது. நமது மாடி தோட்டத்தை விரிவு படுத்த, அடுத்த கட்டமாக DO IT YOURSELF KIT –ல் வந்த இருபது Poly Grow Bags-ஐ தோட்டத்தில் அமைக்க ஆரம்பித்தேன். இதில் பொதுவாக கீரைவகைகளை போடலாம் என்று இருக்கிறேன். இந்த வருட இறுதியில் Shade Net எல்லாம் வைத்து அமைக்கும் வரை பெரிதாய் ஏதும் செய்ய முடியாது (எங்க வீட்டை சுற்றி நிறைய காலி இடமாக கிடப்பதால் நிறைய அனல் காற்று அடிக்கும். பெரிய செடிகள் தாக்கு பிடிக்காது)
நிறைய நண்பர் கேட்கும் விவரம், Coir Pith வைத்து தொட்டிக்கான மண் தயாரிப்பது பற்றி. எவ்வளவு விகிதம் மண் கலக்க வேண்டும், வேறு என்ன என்ன கலக்க வேண்டும் என்பது பற்றி. இதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்கிறார்கள். சிலர் Fungicide போன்ற மக்க வைக்கும் பூஞ்ஜானங்களை போட்டுCoir Pith-ஐ மக்க வைத்து, பிறகு அதில் உரம் கலந்து பயன்படுத்துகிறார்கள் (DO IT YOURSELF KIT also suggesting the same method). இன்னும் சிலர் ஒரு படி மேலே போய்,perlite, vermiculite என்று சில பொருட்களை கலந்து தயாரிக்கிறார்கள்.
இருக்கிறத வச்சி எளிதாய் செய்வது தான் நம் தோட்டம். கிடைக்கும் அனுபவத்தை வைத்து நாமே சரி செய்து கொள்ளவேண்டியது தான். என் மாடி தோட்டத்திற்கு நான் எடுத்து கொண்டது, Coir Pith, செம்மண், மண்புழு உரம். இதை 2:1:1 என்ற விகிதத்தில் எடுத்து கொண்டேன். மண்புழு உரம் இங்கே TNAU-ல் விலை குறைச்சலாக கிடைபதால் பிரச்னை இல்லை. விளைச்சல் நன்றாகவே வந்திருக்கிறது.போன சில மாடிதோட்டம் பதிவுகளை பார்த்தால் செடிகளின் பசுமையும் விளைச்சலும் உங்களுக்கே தெரியும். ஒரு செடி முருங்கையை வெறும்Coir Pith, செம்மண் கலவை மட்டுமே வைத்து ஒரு முயற்சியாக வைத்திருக்கிறேன். அதன் மேல் கொஞ்சம் உரம் கலந்தால் போதும். Coir Pith என்பது ஒன்றுமே இல்லாத வெறும் சக்கை தான். நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் அவ்வளவே. அதில் செடிக்கு தேவையான உரங்களை நாம் கலந்து கொள்ளவேண்டியது தான். செம்மண கலப்பது கிட்டதட்ட செடிக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து விடும்.
நான் இரண்டு விதமான கலவை எடுத்துக்கொண்டேன். முதல் கலவை வெறும் Coir Pith மற்றும் செம்மண் மட்டும். இதை ஒரு பாதி அளவுக்கு நிரப்ப பயன்படுத்திக்கொண்டேன் (இதனால் மண்புழு உரம் தேவையை குறைக்கலாம்). மேல் பாதிக்கு Coir Pith, செம்மண் மற்றும் மண்புழு கலவையை போட்டு விட்டேன்.
DO IT YOURSELF KIT-ல் ஒவ்வொரு பைக்கும் இரண்டு கிலோ அளவிலான Coir PithBlock வைத்திருந்தார்கள். நான் மேலே கூறிய படி பயன்படுத்திய போது 15 பிளாக்குகள் தான் தேவை பட்டது (மணலும் உரமும் கலந்து விட்டதால்). இப்போது அடிக்கும் வெயிலை பார்க்கும் போது, ஜூன் தொடக்கத்தில் விதைகள் போட்டு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதுவரை அவ்வப்போது கொஞ்சம் நீருற்றி வந்தால் கலவை மக்கி நமக்கு தயாராகி கொண்டிருக்கும்.
Comments
Post a Comment