தோட்டம் – தகவல்-2 (விதைகள், பஞ்சகாவ்யா, மண்புழு உரம்)



இது ரொம்ப முக்கியமாய் பார்க்க வேண்டிய பகுதி. எந்த ஒரு பொழுது போக்கையும் எடுத்துக்கொண்டால், அது சம்மந்தமாக பொருட்களை சேர்ப்பதே ஒரு சந்தோசம். Painting செய்பவர்கள் என்றால் அது சம்மந்தமாக palette, paints, brushஎன்று சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். எதாவது ஒரு இசை அமைப்பாளர் ரசிகர் என்றால் எத்தனை சி.டி இருக்கிறதோ அத்தனையையும் சேர்த்துக் வைத்திருப்பார்கள் (என்னை போல் ராஜா ரசிகர்கள்). அப்படி தான் தோட்டம் என்றால், கிடைக்கும் அத்தனை வகை விதைகளையும் சேர்ப்பதே ஒரு சந்தோசம். அதை பயன்படுத்துகிறோமோ இல்லையோ, ஆனாலும் எந்த கண்காட்சி சென்றாலும் எதாவது விதை விற்பனை கடையை பார்த்து விட்டால் நம்ம மனசு தானாகவே அங்கு சென்று விடும். புதிதாக ஒரு ஐந்து பாக்கெட் விதைகளாவது வாங்கினால் தான் நமக்கு சந்தோசம். 

My Seed Box/Collection
விதைகள் என்று பார்த்தால் Hybrid மற்றும் நாட்டு விதைகள் என்று இரு வகைகள் கூறலாம். வீட்டுத் தோட்டம் என்று போகும் போது, முடிந்த அளவுக்கு ஹைப்ரிட் விதைகளை காய்கறி, பழ மரங்களுக்கு தவிர்க்கலாம். நாட்டு விதைகளில் வரும் செடிகள் பொதுவாய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாய் இருக்கும். நீண்ட காலம் பலன் தரும். அடுத்த பருவத்திற்கு அதில் ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து கொள்ளலாம். வருடா வருடம் விதை வாங்க வேண்டியதில்லை. வேண்டுமானால் பூ செடிகளுக்கு ஹைப்ரிட் போகலாம்.

நான் பொதுவாய் அடிப்படை காய்கறி விதைகள் (கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை) இங்கே அக்ரி யுனிவர்சிட்டியில் வாங்குவேன். அவைகள் ஹைப்ரிட் விதைகள் தான்.  நாட்டு கத்தரி (வெள்ளை) விதைகள் ஊரில் இருந்து வாங்கி வருவதுண்டு. முழுவதும் நாட்டு காய்கறிகளுக்கு மாறி பார்க்கலாம் என்று இந்த முறை வானகம் ஸ்டாலில் இருந்து வெண்டை, அவரை என்று எல்லாம் வாங்கி வந்திருக்கிறேன். நாட்டு விதைகள் வேண்டும் என்றால் (வானகம்) போன் செய்தால் கூரியரில் அனுப்பி வைப்பதாக அந்த ஸ்டாலில் இருந்தவர் கூறினார். விவரம் வேண்டுபவர்கள் எனக்கு gsivaraja@gmail.com –க்கு ஒரு மடலை தட்டி விடுங்கள்.

கேரட், காலி ஃப்ளவர், கோஸ் என்றால் ஹைப்ரிட் விதைகள் தான் போக வேண்டும். ஹைப்ரிட் விதைகள் என்றால் பொதுவாய் கிடைப்பது Omaxe Brand விதைகளை கூறலாம். என் தோட்டத்தில் விளைந்த கேரட், காலி ஃப்ளவர், கோஸ் எல்லாம் Omaxe Brand விதைகள் தான். இவை பொதுவாய் எல்லா பெரிய விதை கடைகளிலும் கிடைக்கும். அவர்கள் இணையத்திலும் கிடைக்கிறது. இது தவிர Kraft Seeds-ம்Omaxe Brand மாதிரி தான். 

Namdhari Seeds – போன டிசம்பரில் Coimbatore Shopping Festival-ன் போது, Gerbera, Carnation, Pansy விதைகள் தேடியபோது ஒரு கடையில் இந்த பிராண்டு விதைகள் கிடைத்தது. ஒவ்வொன்றும் விலை Rs. 45. வாங்கி வந்து முளைக்க போட்ட போது, அதன் முளைப்பு திறன் (Germination Rate) ஆச்சரியபட வைத்தது. GerberaPansy விதைகளே 100% முளைத்தது. பிறகு Namdhari Seeds பற்றி தேட ஆரம்பித்த போது,Online-ல் அவர்கள் இணையத்தில் விற்பது இல்லை போல. இங்கே கோவையில் ஒரு கடையை (Sakthi Agro ServiceDistributor List-ல் போட்டிருந்தார்கள். அந்த கடையை தேடி நேரில் போய் விசாரித்த போது Namdhari விதைகள் ஜூனில் தான் வரும் என்றார். Bhawani Seeds என்று ஒரு பிராண்டு தான் வைத்திருந்தார் (Rs.25 / pocket). Aster, Cosmos விதைகள் வாங்கி வந்தேன். இன்னும் முளைக்க போடவில்லை.இந்த கடை TNAU-kku போகும் போது தடாகம் ரோடு-வடவள்ளி சிக்னலின் அருகில் இருக்கிறது. Namdhari Seeds பெங்களூர் கம்பெனி. எனவே பெங்களூரில் எளிதாக கிடைக்கும். அங்கே Namdhari Fresh கடைகளில் கிடைக்கும் என்றும் இணையத்தில் சிலர் கூறி இருந்தார்கள். 
Map - Sakthi Agro Service
இங்கே கோவையில் எனக்கு கொடுத்த கம்பெனியை தேடி நேரில் போய் இன்னும் கொஞ்சம் விதை வாங்கி வந்தேன். அவர்கள் Namdhari flower Seeds collection கொஞ்சம் வைத்திருக்கிறார்கள். பெரிதாய் ஒன்றும் இல்லை. மற்ற பொருட்கள் எல்லாம் விலை ரொம்ப அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த நிறுவனம் பற்றி அறிமுகம் தேவை இல்லை. 

இணையத்தில் ஒரு Namdhari  Seeds collection பார்த்தேன். அந்த Site எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை. 

இணையத்தில் விதைகள் வேண்டும் என்றால், gardenguru.in ல் நிறைய வகைகள் பார்க்க முடிகிறது.
 
பொதுவாய் காய்கறி விதைகளுக்கு பாக்கெட் பத்து ரூபாய்க்கு மேல் லோக்களில் வாங்க வேண்டாம் (Omaxe Hybrid seeds, Cherry tomato seed மாதிரி  போகும் போது முப்பதில் இருந்து நாற்பது ரூபாய் ஆகலாம்). இங்கே TNAU-ல் பத்து ரூபாய்க்கு ஒரு பாக்கெட் வெண்டை விதை வாங்கி பார்த்தால் அதன் அளவு தெரியும். அதையே நான்கு, ஐந்து பாகமாய் பிரித்து ஒவ்வொன்றும் பாக்கெட் இருபது முப்பது ரூபாய்க்கு லோக்களில் விற்கும் கம்பெனிகளும் இருக்கின்றன. அது நமக்கு தேவை இல்லை. கீரை எல்லாம் ஐந்து கிராம், பத்து கிராம் என்று உரக் கடைகளில் வாங்கலாம். 
   
விதை பற்றி கூறும் போது, இன்னொரு விசயத்தையும் கூற வேண்டும். பொதுவாய் எங்கு Exhibition போட்டாலும் அங்கே கலர் கலராய் பாக்கெட்டில், தக்காளி முதல் கேரட் வரை, செண்டு பூவில் இருந்து ஜெர்பரா வரை எல்லாம் பாக்கெட் பத்து ரூபாய் என்று விற்கும் ஒரு கடை கண்டிப்பாய் இருக்கும். பத்து ரூபாய் தான என்று நாமும் கிடைத்ததை எல்லாம் அள்ளி வருவது உண்டு. சில நேரம் கத்தரி பாக்கெட்டில் கத்தரிக்கு பதிலாக பூசணி விதை கூட இருந்திருக்கிறது. நான்Namdhari Seeds வாங்கிய போது, சும்மா Test  செய்து பார்க்கலாம் என்று அந்த பத்து ரூபா கையில் போய் ஜெர்பரா, Aster என்று சில பாக்கெட்டுகளை வாங்கி வந்து போட்டேன் (அவிங்க மட்டும் எப்படி பத்து ரூபாய்க்கு இந்த விதைகளை கொடுக்கறாங்க என்று ஒரு ஆர்வம் தான்). அதோட Result கீழே. போட்ட விதை போட்ட படியே இருக்கிறது. கொடுத்த காசு அந்த கடை காரருக்கு மொய் தான். அடுத்த முறை யோசிச்சி வாங்குங்க :-)
Namdhari Seed Vs Rs.10 Seed :-)
 மேலும் சில தகவல்கள். இங்கே கோவையில் TNAU-ல் நிறைய பொருட்கள் ரொம்பவே விலை குறைவாக கிடைக்கிறது. அவர்கள் பொதுவாய் இதை எல்லாம் விளம்பரம் செய்வது இல்லை. மண்புழு உரம் கிலோ ஆறு  ரூபாய்க்கே கிடைக்கிறது (வெளியே அதையே முப்பது-நாற்பது ரூபாய்க்கு விற்கிறார்கள்). மண்புழு உரம் வேண்டும் என்றால், திங்கள்-வெள்ளி மட்டும் (வெள்ளி அன்று மதியம் வரை மட்டும்) கிடைக்கும். நாம் தடாகம் ரோடு-வடவள்ளி சிக்னலில் இருந்து போகும் போது, இடது பக்கம் (Opp. To the Botanical Garden/Park Gate) போய் கேட்டால் கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான பொருள், பஞ்சகாவ்யா. TNAU-ல் லிட்டர் Rs.80-க்கே தரமான பஞ்சகாவ்யா கிடைக்கிறது. அதே இடப்பக்கம் போய் Environmental Science Department (ENS Department) என்று கேட்டால் சொல்வார்கள். நிறைய கம்பெனிகள் அரை லிட்டர் பஞ்சகாவ்யாவையை Rs.150 க்கு விற்க பார்த்திருக்கிறேன். TNAUதான் நிறைய கம்பெனி பஞ்சகாவ்யா தரத்தையே Certify செய்கிறது. நமக்கு TNAUதயாரிப்பே விலைகுறைவாக கிடைக்கிறது. நான் போனபோது சனிக்கிழமையே கிடைத்தது. திங்கள்-வெள்ளி கண்டிப்பாக கிடைக்கும்.

TNAU-ல் இப்போது விதைகளுக்காகவே ஒரு Vending Machine நிறுவி இருக்கிறார்கள் (at Botanical Garden/Part entrance). பத்து ரூபாய் நோட்டை சொருகி விதையை தேர்ந்தெடுத்தால் அதுவே கொடுத்துவிடுகிறது. ரொம்ப நல்ல முயற்சி (ஆனால் விதை தான் வெறும் தக்காளி,கத்தரி, வெண்டைக்காய், பாகல் என்று ரொம்ப குறைவான வகைகளையே நிரப்பி வைத்திருக்கிறார்கள்)
 
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், மற்ற ஊர்களில் (குறிப்பாக சென்னை) Coir Pith, விதை, Nursery Tray,  பஞ்சகாவ்யாமண்புழு உரம் போன்ற பொருள்கள் தரமாக, விலை நியாயமாக உங்கள் ஊர்களில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு பயன்படட்டும்.

Comments

Popular posts from this blog

திருக்கோயில்

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு

கீரை மருத்துவம்