கமம்
🙏🏽 *தினம் ஒரு திருக்கோவில்:*🙏🏽
♦💧♦💧 *BRS*♦💧♦💧♦
*சிவன் குருவாக வீற்றிருக்கும் சிவத்தலம்..*
🔵⚜🔵⚜ *BRS*🔵⚜🔵⚜🔵
*அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் - நகாப்பட்டினம்*
தொலைபேசி எண் : *+91-94865 24626*
🍁🐚🍁🐚 *BRS*🍁🐚🍁🐚🍁
மூலவர் : *முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , (யூதிகா பரமேஸ்வரர்)*
அம்மன்/தாயார் : *அணிகொண்ட கோதையம்மை,( சத்தியானந்த சவுந்தரி)*
தல விருட்சம் : *முல்லை*
தீர்த்தம் : *பிரம்ம, சந்திர தீர்த்தங்கள்*
பழமை : *1000-2000 வருடங்களுக்கு முன்*
புராண பெயர் : *தென்திருமுல்லைவாயில்*
ஊர் : *திருமுல்லைவாசல்*
பாடியவர்கள்: *திருஞானசம்பந்தர்*
🅱 *தேவாரப்பதிகம் :* 🅱
*ஊனேறு வேலின் உருவேறு கண்ணி ஒளியேறு கொண்ட ஒருவன் ஆனேற தேறி யழகேறு நீறன் அரவேறு பூணும் அரனூர் மானேறு கொல்லை மயிலேறி வந்து குயிலேறு சோலை மருவித் தேனேறு மாவின் வளமேறி யாடு திருமுல்லை வாயில் இதுவே.* - திருஞானசம்பந்தர்
🌱 *தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 7வது தலம்..* 🌱
🅱 *திருவிழாக்கள்:*🅱
🌻 மாசி மகத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது..
🅱 *தல சிறப்பு:*🅱
🎭 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
🎭 இங்குள்ள லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.
🎭 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது..
🎭 உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
🎭 சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.
🎭 இத்தலத்தில் வாயு திசையிலுள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள்.
🎭 அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த் நோயைப் போக்கிக் கொண்ட தலம்.
🎭 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 7 வது தேவாரத்தலம் ஆகும்..
🅱 *நடைதிறப்பு :*🅱
🗝 காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.. 🗝
🅱 *பொது தகவல்:*🅱
🌤 திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன.
🌤 இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
🌤 திருமுல்லைவாசல் கடற்கரையோரத் தலம்.
🌤 உப்பனாற்றின் வடகரையில் உள்ளது.
🌤 கோயிலுக்கு இராஜகோபுரமில்லை.
🌤 முகப்பு வாயில் மட்டுமே உள்ளது.
🌤 முகப்பு வாயிலைக் கடந்தவுடன் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபத்தைக் காணலாம்.
🌤 ஒரு பிராகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தின் இறைவன் முல்லைவனநாதர் மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
🌤 இவருக்கு மாணிலாமணி ஈஸ்வரர், யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு.
🌤 உள் பிராகரத்தில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஷண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.
🌤 தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிக அழகாக உள்ளது.
🅱 *பிரார்த்தனை:*🅱
👉🏽 சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்..
🅱 *நேர்த்திக்கடன்:*🅱
👉🏽 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
🅱 *தலபெருமை:*🅱
🍁 பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால், பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லை வாசல் ஆகும்.
🍁 திருமுல்லை வாசல் என்ற இத்தலத்தின் இறைவன் முல்லைவனநாதர். மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
🍁 அம்பாளின் பெயர் அணிகொண்ட கோதை என்ற சத்தியானந்த சவுந்தரி.
🍁 பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது.
🍁 சுசாவி என்பவரின் மூத்தபிள்ளை வாமதேவர். தந்தை இறந்ததும் அவரது எலும்பை புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் போட்டார். அப்படி போட்டு வரும் போது இத்தலத்து தீர்த்தத்தில் போடும்போது அந்த எலும்பு, ரத்தினக்கல்லாக மாறியது. உடனே தந்தைக்கு இங்கு பிதுர் கடனாற்றினார். அத்துடன் தந்தைக்கு முக்தியளித்த தனயரானார்.
🍁 இத்த

Comments

Popular posts from this blog

திருக்கோயில்

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு

கீரை மருத்துவம்