குன்றக்குடி குடைவரைக் கோயில்

புலிக்கரை ஐயனார் துணை


குன்றக்குடி குடைவரைக் கோயில்

குன்றக்குடிக்குப் பலமுறை சென்று சண்முகப் பெருமானை வணங்கி வந்துள்ளேன்.  சிலபொழுது குன்றின் அடிவாரத்தில் உள்ள குடைவரைக்கோயிலுக்கும் சென்று வணங்கி வந்துள்ளேன்.  இன்று புராட்டாசி 28ஆம் நாள் (14 அக்டோபர் 2013) திங்கள்கிழமை வியஜயதசமி என்பதால் அரசு விடுமுறைநாள்.  வீட்டில் இருந்தேன்.  காலை 9.00 மணியளவில் சென்னை அன்பர் மனோகரன் அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்தார்.  அவர் காரைக்குடி கோவிலூருக்கு வந்திருப்பதாகக் கூறினார்.   அவர் இதுவரை குன்றக்குடியின் குடைவரைக்கோயிலைப் பார்த்ததில்லை என்று கூறினார்.  எனவே அவரை அழைத்துக் கொண்டு குன்றக்குடிக்குப் பயணமானேன்.  குன்றக்குடி செல்லும் வழியில் உய்யக்கொண்டான் சிறுவயலில் உள்ள சிவன்கோயிலிலும், பொன்னழகி யம்மன் கோயிலிலும் வழிபாடு செய்தோம்.

மதியம் குன்றக்குடி குடைவரைக் கோயிலுக்குச் சென்றோம்.

ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து சிவலிங்கங்கள்.
அதுவும் ஒரே இடத்தில்.

நான்கு சிவலிங்கங்கள் குடைவரைக்குள் மேற்கு நோக்கி உள்ளன.
இவற்றிற்கு எதிரே ஒரு சிவலிங்கம் கிழக்குநோக்கி உள்ளது.
அம்மன் சந்நிதியோ எல்லாவற்றிற்கும் கிழக்கே தெற்குநோக்கி உள்ளது.

இராசகோபுரதம் (மொட்டைக் கோபுரம்)
அம்மன் கோயில்
துவார பாலகர்



மகாவிஷ்ணு






விநாயப்பெருமான் 



யானையும் மயிலும் சிவலிங்கத்தைப் பூசித்தல்

தூண் சிற்பம் (யானை தன்மீது உள்ள சிவலிங்கத்தின் மீது மலர்கள் விழும்படியாக பூமரத்தின் கீழ்நின்று மரத்தை அசைக்கிறது)

தூண் சிற்பம் (காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பெயரும் முட்டாள் என்பர் என்பதற்குக் காட்டாக தவஞானியர்கள் காமக்கிளத்தியைக் கைதொளும் காட்சி)

மயில் தோகைவிரித்து ஆடுகிறது 

காளைமாடும் யானையும் (தலை ஒன்று உருவம் இரண்டு)

மிகவும் பழமையான சிற்பங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  இதனால் இக்கோயில் கட்டப்படுவதற்கு முன்பே இங்கு வழிபாடு இருந்துள்ளதை அறியமுடிகிறது.



கோயிற் கருவறை நுழைவாயிலின் மேலே பள்ளிகொண்ட பெருமாள்






குன்றக்குடி குடைவரைக் கோயில் 

Comments

Popular posts from this blog

திருக்கோயில்

ராமேஸ்வரம் கோவில் சிறப்பு

கீரை மருத்துவம்